விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை. எத்தனை நவீன தொழிநுட்பங்கள் தோன்றினாலும் எந்த ஒரு மெத்தையாலும் நாணல் புற்களால் ஆனா பாயின் குளிர்ச்சியை தர இயலாது, மர பொம்மைகளுக்கு பிளாஸ்டிக் பொம்மைகள் ஈடாகாது என்பது போல பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, நம் பெற்றோர்கள் பயன்படுத்தி, நமக்கு அறிமுகம் செய்ததை நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்க மறந்ததை தங்கள் தொழிலாக மேற்கொண்டுள்ளனர் மதுரையை சேர்ந்த திரு. கதிரவன், திரு. சதீஷ் மற்றும் கட்டுமன்னார்கோவிலை […]
Year: 2020
தமிழக பாரம்பரியப் பொருள்கள் விற்பனையில் பட்டையைக் கிளப்பும் ‘Native Things’
இந்தியாவின் பெருமையே அதன் கலாச்சாரமும், பண்பாடும்தான். என்னதான் காலங்கள் மாறினாலும் நம் பாரம்பரியம் மாறுவதில்லை. இயந்திரமயமான நவீன வாழ்க்கைக்கு நாம் மாறினாலும், நமது பாரம்பரிய உடைகள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய சடங்குகள் என எல்லோருமே வாழ்க்கையின் ஏதாவதொரு காலகட்டத்தில் நம் பாரம்பரியத்தோடு ஒன்ற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூச்சு விடக்கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் இந்த போட்டி உலகில், நாம் நம் இழந்துவிட்ட பாரம்பரியத்தை எங்கே மீட்பது, எப்படி மீட்பது. நம் பாரம்பரிய பொருள்கள் எங்கே கிடைக்கும் […]
Pulicat ( Pazhaverkadu ) palm leaf products
பழவேற்காடு (புலிக்காட்) பனையோலைப் பொருட்கள் இயற்கையான அழகு, மனதை மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டடங்கள், வளமான கலாச்சாரம், வலிமையான வரலாறு ஆகியவற்றை கொண்டுள்ள, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியை தனதாக்கி கொண்ட நான்கு புறங்களிலும் நீர் சூழ, சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவர் சிறு நகரம்தான் ‘புலிக்காட்’ என்று அழைக்கப்படும் பழவேற்காடு. தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து வரலாறு பேசும் அநேக நூல்கள் பனை ஓலையில் எழுதப்பட்டவையே. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பண்டைய தமிழர்கள் பனை […]